விஜய் ஆண்டனி நடிக்கும் 'ஹிட்லர்' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது

விஜய் ஆண்டனி நடித்துள்ள 'ஹிட்லர்' திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.
விஜய் ஆண்டனி நடிக்கும் 'ஹிட்லர்' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது
Published on

சென்னை,

'படைவீரன்', 'வானம் கொட்டட்டும்' ஆகிய படங்களை இயக்கிய தனா இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் 'ஹிட்லர். இந்த படத்தில் ரியா சுமன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கவுதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

செந்தூர் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு விவேக் - மெர்வின் இசையமைக்கின்றனர். நவீன்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த மோஷன் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் 'ஹிட்லர்' படத்தின் டீசர், டிரைலர் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com