8 ஆண்டுகளை நிறைவு செய்த 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம்

‘அச்சம் என்பது மடமையடா’ படம் வெளியாகி 8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இது குறித்தான புகைப்படத்தை அப்படத்தின் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் பகிர்ந்துள்ளார்.
8 ஆண்டுகளை நிறைவு செய்த 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம்
Published on

சென்னை,

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான திரைப்படம் அச்சம் என்பது மடமையடா, இப்படத்தில் நடிகர் சிலம்பரசன், மஞ்சிமா மோகன் மற்றும் பாபா சேகர் உட்பட பலர் நடித்து இருந்தனர். ரொமான்டிக் ஆக்சன் படமாக வெளியாகிய இந்த படம் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பு பெற்று இருந்தது. ஏ.ஆர்.ரகுமானின் இசையில் இளைஞர்களின் மனதை கவரும் காதல் பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. மேலும் இப்படத்தில் வரும் பைக் ரைட் காட்சிகளும் காதல் வசனங்களும் இன்றளவும் ரசிகர்களால் விரும்பப்பட்டு வருகிறது.

அச்சம் என்பது மடமையடா சந்தேகத்திற்கு இடமின்றி சிம்புவின் கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாகும். ரொமாண்டிக் ஆக்ஷன்-திரில்லர் படமாக உருவாகி வெளியான இந்த திரைப்படம் வெளியாகி இன்றோடு 8 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் சிம்புவின் பெயர் ரஜினிகாந்த் என தெரியும் போது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.

இன்றைய கால காதலர்களுக்கு இந்த படம் மிகவும் ஒத்துபோனது. தற்போது இந்த படத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டரில் கவுதம் மேனன் பகிர்ந்துள்ளார். மேலும் இது தனக்கு மிகவும் சிறந்த ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளார். படத்தின் நாயகன் பெயரை கூறாமல் படம் முடிவில் கூறியதும் புது வித யுக்தியாகவே இருந்தது. இப்படத்தில் சதீஷ் கிருஷ்ணன், பாபா சேகல், டேனியல் பாலாஜி, நாகிநீடு, ஆர்.என்.ஆர்.மனோகர், அஞ்சலி ராவ் மற்றும் கிரிஷ் மேனன் ஆகியோர் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளனர்.

கவுதம் மேனனின் இந்த பதிவிற்கு பல ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர் அச்சம் என்பது மடமையடா படம் எத்தனை வருடங்கள் ஆனாலும் தங்களது மனதில் நீங்காது என்பதை குறிப்பிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com