உண்மை சம்பவத்தை வைத்து உருவாகி இருக்கும் "போகி" திரைப்படம்


உண்மை சம்பவத்தை வைத்து உருவாகி இருக்கும் போகி திரைப்படம்
x

போகி திரைப்படத்தை இயக்குனர் விஜயசேகரன் இயக்கியுள்ளார்.

விஜயசேகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் போகி. வி.ஐ. குளோபல் நெட்வொர்க்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தில் நபி நந்தி சரத், சுவாசிகா, பூனம் கவுர், வேல ராமமூர்த்தி, சங்கிலி முருகன், மொட்டை ராஜேந்திரன், எம். எஸ்.பாஸ்கர், முரு ஸ்டார் உள்பட பலர் நடித்துள்ளனர். மரியா மனோகர் இசை அமைத்திருக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற 1-ந் தேதி படம் திரைக்கு வருகிறது. படம் பற்றி இயக்குனர் விஜயசேகரன் கூறுகையில், உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை உருவாக்கியிருக்கிறேன். சென்னை நகரம் தற்போது உலக தரம் வாய்ந்ததாகவும் தொழில்நுட்பம் வானத்தை எட்டும் அளவிற்கு வளர்ந்துள்ள நிலையில் ஏ.ஐ. தொழில்நுட்பம் பெண் பிள்ளை பெற்ற மக்களை நாளுக்கு நாள் பதட்டத்துடன் வாழ வைக்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சுமார் 6000 அடி உயரத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத மலை கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சைக்கிள் கூட செல்ல முடியாத இந்த மக்களுக்கு கல்வியும் மருத்துவமும் கனவாக தான் இருக்கிறது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் கதாநாயகன் அழகர் தனது தங்கை கவிதா மூலமாக தனது கிராமத்திற்கு மருத்துவ தேவையை சரி செய்ய விரும்புகிறார். அவரது முயற்சி பலித்ததா என்பதே படத்தின் மீதி கதை. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story