எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிரபல ஓடிடி தளத்தில் வெளியான 'ஜப்பான்' திரைப்படம்

ஜப்பான் திரைப்படம் உலக அளவில் ரூ.28 கோடிக்கும் மேல் வசூலித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிரபல ஓடிடி தளத்தில் வெளியான 'ஜப்பான்' திரைப்படம்
Published on

சென்னை,

நடிகர் கார்த்தியின் 25வது படம் என்ற பெருமையுடன் வெளியான திரைப்படம் 'ஜப்பான்'. இயக்குனர் ராஜு முருகன் இயக்கியிருந்த இந்த திரைப்படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடித்திருந்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த படம் கடந்த மாதம் 10ம் தேதி வெளியானது.

'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்திற்கு போட்டியாக ஒரே நாளில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் இந்த படம் உலக அளவில் ரூ.28 கோடிக்கும் மேல் வசூலித்து தயாரிப்பாளருக்கு லாபத்தை பெற்று தந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜப்பான் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com