ஆயிரம் கோடி வசூலை கடந்த 'ஜவான்' திரைப்படம்... படக்குழு அறிவிப்பு..!

ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படம் உலக அளவில் ஆயிரம் கோடி வசூலை கடந்துள்ளது.
ஆயிரம் கோடி வசூலை கடந்த 'ஜவான்' திரைப்படம்... படக்குழு அறிவிப்பு..!
Published on

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஜவான்'. பான் இந்தியா படமாக வெளியான இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, யோகிபாபு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 'ஜவான்' திரைப்படம் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது.

இந்த நிலையில், இந்த படத்தின் வசூல் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜவான்' திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது. இதனை இயக்குனர் அட்லீ தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார். அந்த பதிவில் அவர் 'ஜவான்' திரைப்படம் உலக அளவில் ரூ.1,004.92 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com