‘கருப்பு’ படம் விஜய் நடிக்க வேண்டியது.. ரகசியம் உடைத்த ஆர்.ஜே பாலாஜி

இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘கருப்பு’ படம் விஜய் நடிக்க வேண்டியது.. ரகசியம் உடைத்த ஆர்.ஜே பாலாஜி
Published on

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘கருப்பு’. இதில் ஹீரோயினாக திரிஷா நடித்துள்ளார். மேலும் நட்டி, இந்திரன்ஸ், சுவாசிகா, யோகி பாபு உள்ளிட்டோரும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்திருக்கும் இப்படம் சூர்யா இப்படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார். இப்படம் வருகிற மே மாதம் 14ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி ‘கருப்பு’ படத்தின் கதை முதலில் நடிகர் விஜய்யிடம் சொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ‘கருப்பு’ படத்தின் கதை விஜய்க்கு மிகவும் பிடித்திருந்ததுடன், உடனே படத்தைத் தொடங்கவும் அவர் ஆர்வம் காட்டியதாக தெரிவித்தார். ஆனால், திரைக்கதையை முழுமையாக வடிவமைக்க கூடுதல் காலம் தேவைப்பட்டதால், அந்த திட்டம் அப்போது முன்னேறவில்லை என கூறினார்.

இதற்கிடையில், நடிகர் விஜய் அரசியலுக்கு திரும்பிய நிலையில், ‘கருப்பு’ படத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு, தற்போது நடிகர் சூர்யாவிற்கு கதை சொல்லப்பட்டுள்ளதாகவும் ஆர்.ஜே. பாலாஜி குறிப்பிட்டார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com