22 வருடங்களுக்கு பிறகு ரீ-ரிலீஸாகும் `குத்து' திரைப்படம்

வருகிற மே மாதம் இந்த படம் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
22 வருடங்களுக்கு பிறகு ரீ-ரிலீஸாகும் `குத்து' திரைப்படம்
Published on

சமீப காலமாக 90கள் மற்றும் 2000களின் ஹிட் திரைப்படங்கள் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்படும் 'ரீ-ரிலீஸ்' கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கில்லி , படையப்பா, மங்கத்தா, சச்சின், மற்றும் 3 போன்ற படங்கள் சமீபத்தில் வெளியாகி, திரையரங்குகளில் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று, பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை புரிந்துள்ளன.

இதற்டையில், சிம்பு நடித்த குத்து திரைப்படமும் 'ரீ-ரிலீஸ்' கலாச்சாரத்தில் இணைந்துள்ளது. 2004ஆம் ஆண்டு எ. வெங்கடேஷின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிலம்பரசன், ரம்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இது நடிகை ரம்யா நடித்த முதல் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் நித்தின் குமார் ரெட்டி, நேகா பாம்பு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த தில் திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.

இந்த நிலையில் 22 வருடங்களுக்கு பிறகு சிம்புவின் குத்து திரைப்படம் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. அதாவது, வருகிற மே மாதம் இந்த படம் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தை எதிர்பார்த்து சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com