ஜனவரி 13ம் தேதி ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது: தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஜனவரி 13ம் தேதி மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜனவரி 13ம் தேதி ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது: தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Published on

சென்னை,

மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர்.  இந்தப் படத்துக்கு இசை - அனிருத். இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து மாஸ்டர் பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமியை நடிகர் விஜய் நேற்று சந்தித்துப் பேசினார். திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை (தற்போது 50 சதவீதமாக உள்ளது) அனுமதிக்குமாறு முதல்வரிடம், நடிகர் விஜய் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியாகின. நடிகர் விஜயுடன், படத் தயாரிப்பாளர் லலித் குமார் உள்பட படக்குழுவினரின் சந்திப்பில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் பங்கேற்றார்.

இந்நிலையில் ஜனவரி 13ம் தேதி மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜனவரி 13ம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் மாஸ்டர் படம் ஒரே சமயத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com