ஏப்ரலில் ரீ-ரிலீசாகும் 'பையா' திரைப்படம்

'பையா' திரைப்படம் வருகிற ஏப்ரல் 11-ந்தேதி ரீ-ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரலில் ரீ-ரிலீசாகும் 'பையா' திரைப்படம்
Published on

சென்னை,

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி, தமன்னா ஆகியோர் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பையா'. அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் டிராவலிங் திரில்லர் திரைப்படமாக வெளியான 'பையா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை தாளம் போட வைத்தன. இந்த நிலையில் 'பையா' திரைப்படம் 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 'பையா' திரைப்படம் வருகிற ஏப்ரல் 11-ந்தேதி ரீ-ரிலீசாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

முத்து, ஆளவந்தான், 3, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல பழைய திரைப்படங்கள் சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com