கருப்பு வெள்ளை படமாக வெளியாகும் 'பிரமயுகம்' திரைப்படம்..!

'பிரமயுகம்' திரைப்படம் வருகிற 15-ந்தேதி வெளியாக உள்ளது.
கருப்பு வெள்ளை படமாக வெளியாகும் 'பிரமயுகம்' திரைப்படம்..!
Published on

சென்னை,

ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்முட்டி நடித்துள்ள திரைப்படம் 'பிரமயுகம்'. இந்த படம் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டாலிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராமச்சந்திர சக்கரவர்த்தி மற்றும் எஸ்.சஷிகாந்த் தயாரித்துள்ள இந்த படத்துக்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் 'பிரமயுகம்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. 'பிரமயுகம்' திரைப்படம் வருகிற 15-ந்தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 'பிரமயுகம்' திரைப்படம் கருப்பு வெள்ளை (Black & White) படமாக மட்டுமே வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com