37 ஆண்டுகள் நிறைவு செய்த ‘ராஜாதி ராஜா’ திரைப்படம்!

இந்த படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
37 ஆண்டுகள் நிறைவு செய்த ‘ராஜாதி ராஜா’ திரைப்படம்!
Published on

சென்னை,

இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1989ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ராஜாதி ராஜா. இது ரஜினியின் 125வது படமாகும். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

இதில் ராதா, நதியா, ராதாரவி, ஜனகராஜ், ஆனந்த்ராஜ், வினு சக்ரவர்த்தி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் இளையராஜா அமைத்த பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

ராஜா மற்றும் சின்னராசு என்ற இரட்டை வேடங்களில் ரஜினிகாந்தின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. வெளியான காலத்தில் வசூலில் சாதனை படைத்த இப்படம், 80களின் முக்கிய வெற்றி படங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

இந்நிலையில், ராஜாதி ராஜா திரைப்படம் வெளியாகி இன்று 37 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com