நாளை வெளியாகும் 'ரைபிள் கிளப்' திரைப்படம்

ஆஷிக் அபு இயக்கத்தில் ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள 'ரைபிள் கிளப்' திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.
நாளை வெளியாகும் 'ரைபிள் கிளப்' திரைப்படம்
Published on

சென்னை,

இந்தி திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அனுராக் காஷ்யப். இவர் பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் லக் பை சான்ஸ், பூத் நாத் ரிட்டர்ன் போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார். அனுராக் காஷ்யப் தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். 'லியோ' படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மகாராஜா படத்தில் கொடூரமான வில்லனாக நடித்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மலையாள படத்தில் நடித்துள்ளார். இவர் ஆஷிக் அபு இயக்கியுள்ள 'ரைபிள் கிளப்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் திலீஷ் போத்தன், தர்ஷனா ராஜேந்திரன், வாணி விஸ்வநாத் ஆகியோர் நடித்துள்ளனர். 'ரைபிள் கிளப்' திரைப்படத்தை ஓபிஎம் சினிமாஸ் தயாரித்துள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி வைரலாகின. ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் நாளை (19-ந் தேதி) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com