படுதோல்வியை சந்தித்த 'தேஜஸ்' திரைப்படம்... வைரலாகும் நடிகை கங்கனாவின் வலைதள பதிவு..!

நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ள 'தேஜஸ்' திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.
Image Credits : Twitte.com/@KanganaTeam
Image Credits : Twitte.com/@KanganaTeam
Published on

காந்திநகர்,

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாறாக உருவாகி வெளியான 'தலைவி' படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் தமிழில் வெளியான 'சந்திரமுகி 2' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனை தொடர்ந்து இந்தியில் இவர் நடிப்பில் 'தேஜஸ்' என்ற திரைப்படம் கடந்த 27-ஆம் தேதி வெளியானது. சர்வேஷ் மேவாரா இயக்கிய இந்தப் படத்தில் கங்கனா விமானப்படை அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படம் வெளியான முதலே மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது.

ரூ.60 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் வெறும் ரூ.5 கோடி மட்டுமே வசூலித்து மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. சில திரையரங்குகளில் குறைவான மக்களே படம் பார்க்க வருவதால் பல காட்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் நடிகை கங்கனா துவாரகா கோவிலில் சுவாமி தரிசனம் செய்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவர் தனது எக்ஸ் வலைதளபக்கத்தில், 'சில நாட்களாக என் இதயம் மிகவும் கலங்கியது, கிருஷ்ணரை தரிசிக்க வேண்டும் என்று தோன்றியது, ஸ்ரீ கிருஷ்ணரின் இந்த திவ்ய தலமான துவாரகைக்கு நான் வந்தவுடன், என் கவலைகள் அனைத்தும் கலைந்து விழுந்தது போல் இருந்தது. என்னுடைய பாதம், என் மனம் நிலையானது, எல்லையற்ற மகிழ்ச்சியை உணர்ந்தேன்.ஓ துவாரகை ஆண்டவரே, உங்கள் ஆசீர்வாதங்களை இப்படியே வைத்திருங்கள்' என்று பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் 'தேஜஸ்' திரைப்பட தோல்வி தான் உங்கள் மன கலக்கத்திற்கு காரணமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com