ஓ.டி.டி.யில் வெளியான 'டென் ஹவர்ஸ்' திரைப்படம்

'டென் ஹவர்ஸ்' திரைப்படம் ஒருநாள் இரவில் பேருந்தில் நடக்கும் ஒரு கொலையை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
ஓ.டி.டி.யில் வெளியான 'டென் ஹவர்ஸ்' திரைப்படம்
Published on

சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிபி சத்யராஜ். இவரது நடிப்பில் வெளியான 'வட்டம், மாயோன், கபடதாரி, வால்ட்டர்' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து இவர் இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் 'டென் ஹவர்ஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார்.

ஆக்சன் கலந்த கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படத்தை பைவ் ஸ்டார் மற்றும் டுவைன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்திற்கு கே.எஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கிறார். ஜெய் கார்த்திக் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இதில் சிபி சத்யராஜ் கேஸ்ட்ரோ என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். 

இப்படம் ஒரு நாள் இரவில் பேருந்தில் நடக்கும் ஒரு கொலையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com