

ராகுல் சாங்கிரித்யான் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ரணபலி' பெயர் வைக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியானது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர், நடிகையாக வலம் வருபவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் ஏற்கனவே 'கீதம் கோவிந்தம், டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். தற்போது 3-வது முறையாக விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இணைந்துள்ளனர்.‘ரணபாலி’ திரைப்படத்தின் “ஏதய்யா சாமி" பாடல் சமீபத்தில் வெளியானது.
ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘ரணபாலி’ திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமாகிறார் அர்னால்ட் வோஸ்லூ. இப்படத்தில் நடிகர் அர்னால்ட் வோஸ்லூ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஹாலிவுட் திரைப்படமான ‘தி மம்மி’ மூலம் வில்லனாக இவர் இந்திய ரசிகர்களிடையே பிரபலமாகி இருந்தார்
இந்நிலையில், ‘ரணபாலி’ திரைப்படத்தில் நடிக்கும் அர்னால்ட் வோஸ்லூ பிறந்த நாளையொட்டி படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.