“தி மம்மி ரிட்டர்ன்ஸ்” படத்தின் பணிகள் பூஜையுடன் தொடக்கம்

கிருஷ்ணா நடிக்கும் ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
“தி மம்மி ரிட்டர்ன்ஸ்” படத்தின் பணிகள் பூஜையுடன் தொடக்கம்
Published on

பி.ஜே.கிஷோர் தயாரிப்பில், ஜெய் அமர் சிங் இயக்கத்தில் உருவாகும் படம் தி மம்மி ரிட்டர்ன்ஸ். காமெடி கலந்த பேமிலி படமாக இப்படம் உருவாகிறது. இதன் படப்பூஜையுடன் கூடிய பணிகள் சென்னையில் தொடங்கப்பட்டது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர் விஷ்ணுவர்தன் மற்றும் அஹ்மத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

பல வருட கோமாவில் இருந்து மீண்டு வரும் தன் தாயை காப்பாற்ற தன் அம்மா வாழ்ந்த 1990-களின் உலகை தன் நண்பர்களுடன் இணைந்து உருவாக்குகிறான் மகன். அதில் நடக்கும் களேபரங்கள்தான் இப்படத்தின் கதை. முழுக்க காமெடி, எமோஷன் கலந்த கதையாக இப்படம் உருவாகவுள்ளது. இதில் கிருஷ்ணா, தேவதர்ஷினி, ஸ்வாதி, கின்ஸ்லி, லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளார்கள்.

இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறவுள்ளது. இப்படம் குறித்து இயக்குநர் ஜெய் அமர் சிங், நான் லண்டனில் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்து விட்டு சென்னையில் இயக்குநர் அஹ்மத்திடம் என்றென்றும் புன்னகை படத்தில் பணிபுரிந்தேன். ஆக்சன் படங்கள் அதிகமாக வரும் இன்றைய காலகட்டத்தில் ரசிகர்கள் காமெடி படங்களுக்கு ஏங்குகிறார்கள். எனக்கும் காமெடி படங்கள் தான் அதிகம் பிடிக்கும். எனவே தான் இந்தப்படத்தை முழுக்க முழுக்க ரசிகர்கள் சிரித்து மகிழும் படமாக வடிவமைத்துள்ளேன். ஒரு தாயை காப்பாற்ற மகன் என்னவெல்லாம் செய்கிறான் என்பது தான் படம், எமோஷனலான கதையை, மக்கள் வயிறு வலிக்க சிரிக்கும்படி சொல்லப்போகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com