லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 30ம் தேதி நடைபெறும் - ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு...!

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 30ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 30ம் தேதி நடைபெறும் - ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு...!
Published on

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'லியோ' திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், 'லியோ' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 'லியோ' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளதாகவும் அதற்கான பணிகளில் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் விஜய் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, இசை வெளியீட்டு விழாவுக்கு விஜய் மக்கள் இயக்க முக்கிய நிர்வாகிகள் மாவட்டத்திற்கு 200 பேர் அழைக்கப்பட உள்ளதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் சொந்த வாகனங்களில் ரசிகர்கள் விழாவில் பங்கேற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழா அரங்கின் வெளியே பேனர் வைக்க தடை செய்யப்பட்டுள்ளதாகவும், உரிய அனுமதி பெற்று பேனர் வைத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com