நடிகர் சங்கம் பெயரை மாற்ற வேண்டும் -டைரக்டர் பாரதிராஜா

அமைதிப்படை-2, கங்காரு படங்களை தயாரித்த சுரேஷ் காமாட்சி, ‘மிக மிக அவசரம்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராகி உள்ளார். இதில் சீமான் போலீஸ் உயர் அதிகாரியாக வருகிறார். ஸ்ரீபிரியங்கா பெண் போலீஸ் வேடத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நடிகர் சங்கம் பெயரை மாற்ற வேண்டும் -டைரக்டர் பாரதிராஜா
Published on

இதில் டைரக்டர் பாரதிராஜா கலந்துகொண்டு பேசியதாவது:-
நாங்கள் கலைஞர்கள். எங்களுக்கு எல்லா முகமும் உண்டு. சமூக அக்கறை உள்ள கதையம்சத்தில் மிக மிக அவசரம் படத்தை சுரேஷ் காமாட்சி சிறப்பாக இயக்கி உள்ளார். பிரச்சினைகளை பேசாதவன் மனிதன் இல்லை. குற்றம் கண்ட இடத்தில் விரலை நீட்ட வேண்டும். பாதுகாப்பு பணியில் இருக்கும் பெண் காவலர்கள் வெயிலில் காய்ந்து வாடுவதை பார்க்கும்போது கொடுமையாக இருக்கும்.

அவர்களின் கஷ்டங்கள் படத்தில் சொல்லப்பட்டு உள்ளது. இதில் வசனங்கள் இல்லாமல் உடல் மொழியாலும், முகபாவத்தாலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி படத்தை தாங்கி பிடித்துள்ளார் நாயகி ஸ்ரீபிரியங்கா. தென்னிந்திய நடிகர் சங்கம் என்று இருக்கிறது. அந்த பெயரை தமிழ் நடிகர் சங்கம் என்று மாற்றும்படி 25 வருடங்களாக போராடி வருகிறோம். இன்னும் அது நிறைவேற்றப்படவில்லை.

இதுபோல் தென்னிந்திய பிலிம் சேம்பர் பெயரை மாற்றும்படி வற்புறுத்தியும் நடக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் நாம் இருக்கிறோம்.

இவ்வாறு பாரதிராஜா பேசினார். விழாவில் சீமான், பாக்யராஜ், சுரேஷ் காமாட்சி உள்பட பலர் பேசினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com