‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் புதிய லோகோ: தயாரிப்பு நிறுவனம் வெளியீடு

எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தின் புதிய லோகோ வெளியிடப்பட்டது. #ENPT
‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் புதிய லோகோ: தயாரிப்பு நிறுவனம் வெளியீடு
Published on

சென்னை,

மின்னலே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குநர் கெளதம் மேனன். இவர் பல வெற்றிப்படங்களை தந்துள்ளார். கடைசியாக அவர் இயக்கிய அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

தற்போது இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'துருவ நட்சத்திரம்', தனுஷ் நடிக்கும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய இரண்டு படங்களும் பரபரப்பாக உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் புதிய டைட்டில் லோகோவை வெளியிட்டுள்ளனர். இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். மேலும், முக்கிய வேடத்தில் பிரபல இயக்குநர் சசிகுமார் நடித்து வருகிறார். 'எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்' பி.மதனுடன் இணைந்து கெளதம் மேனன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்' மூலம் தயாரித்து வருகிறார்.

தர்புகா சிவா இசையமைத்து வரும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா - ஜோமன்.டி.ஜான் ஒளிப்பதிவு செய்கின்றனர். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் டீசர் மற்றும் 'மறுவார்த்தை பேசாதே, நான் பிழைப்பேனோ, விசிறி' ஆகிய 3 பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் புதிய டைட்டில் லோகோவை 'ஒன்றாக' நிறுவனம் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. வெகு விரைவில் படத்தின் டிரெய்லர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com