நானி நடித்துள்ள 'ஹாய் நான்னா' படத்தின் புதிய பாடல் வெளியானது..!

'ஹாய் நான்னா' திரைப்படம் வருகிற டிசம்பர் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நானி நடித்துள்ள 'ஹாய் நான்னா' படத்தின் புதிய பாடல் வெளியானது..!
Published on

சென்னை,

இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் நானி நடித்துள்ள திரைப்படம் 'ஹாய் நான்னா'. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்துள்ளார். அப்பா, மகள் உறவை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்துக்கு ஹசம் அப்துல் இசையமைத்துள்ளார். வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் புதிய பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'ஓடியம்மா ஹீட்டு' என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.

பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்த பாடலை துருவ் விக்ரம், ஸ்ருதி ஹாசன், சின்மயி பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'ஹாய் நான்னா' திரைப்படம் வருகிற டிசம்பர் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com