'மார்க் ஆண்டனி' தயாரிப்பாளரின் அடுத்த படம்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ’மார்க் ஆண்டனி’ படத்தை வினோத் தயாரித்திருந்தார் .
The next film from the producer of 'Mark Antony'
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 'திரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்', 'காதலை தேடி நித்யானந்தா, 'வெர்ஜின் மாப்பிள்ளை', 'பஹீரா' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இவரது இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இப்படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் வினோத் தயாரித்திருந்தார் . தற்போது அவர் தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, அறிமுக இயக்குனர் சரன்ங் தியாகு இயக்கத்தில் கிஷன் தாஸ், சிவாத்மிகா ராஜசேகர், ஹர்ஷத் கான், விடிவி கணேஷ் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இதற்கு சித்து குமார் இசையமைக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com