மதுரையில் தொடங்கியது தனுஷ் 56 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் அவரது 56-வது திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியுள்ளது.
மதுரையில் தொடங்கியது தனுஷ் 56 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு!
Published on: 

மதுரை,

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற உள்ள இந்தப் படப்பிடிப்பில் அதிரடி சண்டைக் காட்சிகள் உள்பட படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ்

'லப்பர் பந்து' படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் புதிய படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக 'டி56' என்று அழைக்கப்படும் இப்படம் மதுரையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகிறது.

இப்படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பிரைமார்க் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.

மதுரையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாரநாடு கருப்பணசாமி கோவிலில் பூஜையுடன் தொடங்கியது. அப்போது நடிகர் தனுஷ், கோவிலுக்கு 18 அடி நீளமுள்ள அரிவாளை காணிக்கையாக வழங்கினார்.

இதைத்தொடர்ந்து சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியுள்ளது. இதற்காக நடிகர் தனுஷ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் மதுரை வந்தடைந்தனர். விமான நிலையத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதிரடி காட்சிகள் படமாக்க திட்டம்

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற உள்ள இந்தப் படப்பிடிப்பில் அதிரடி சண்டைக் காட்சிகள் உள்பட படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே வெளியான படத்தின் அறிவிப்பு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கியிருப்பது தனுஷ் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் 2027-ம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X