அண்ணாத்த படத்தின் அடுத்த பாடல் வெளியானது

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் அடுத்த பாடல் இன்று மாலை வெளியானது.
அண்ணாத்த படத்தின் அடுத்த பாடல் வெளியானது
Published on

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், அண்ணன், தங்கை பாச பின்னணியை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை டைரக்டர் சிவா இயக்கியுள்ளார். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார். படத்தில் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் வருகிற நவம்பர் 4 ந்தேதி தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் பாடல்களை வாரத்திற்கு ஒன்றாக படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.

மறைந்த பிண்ணனி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடியிருந்த 'அண்ணாத்த அண்ணாத்த' பாடல்' சாரல் காற்றே' பாடல் 'மருதாணி' என ஏற்கெனவே 3 பாடல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இன்று மாலை அருண் பாரதி எழுதி முகேஷ், திருமூர்த்தி, சம்சுதீன் ஆகியோர் பாடியுள்ள 'வா சாமி' என்ற அதிரடியான பாடல் வெளியாகி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com