சினிமாவில் அடுத்த கட்டம்.. தயாரிப்பில் களம் இறங்கும் ரியோ ராஜ்

ரியோ ராஜ் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளார்.
சினிமாவில் அடுத்த கட்டம்.. தயாரிப்பில் களம் இறங்கும் ரியோ ராஜ்
Published on

கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் ரியோ ராஜ். அதனை தொடர்ந்து 'பிளான் பண்ணி பண்ணனும், ஜோ, ஸ்வீட் ஹார்ட்' ஆகிய படங்களில் நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். இவரது நடிப்பில் சமீபத்தில் ஆண்பாவம் பொல்லாதது என்ற படம் வெளியானது.

தற்போது, அறிமுக இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் ராம் இன் லீலா என்ற நடித்துள்ளார். காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், ரியோ ராஜ் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக, தானே நடிக்க உள்ள இரண்டு படங்களை அவரே தயாரிக்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் புதிய பாதையை தேர்வு செய்துள்ள ரியோ ராஜுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com