பாலையாவின் பாட்டியாகவும் காதலியாகவும் நடித்த ஒரே கதாநாயகி...யார் அவர் தெரியுமா?

பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள பாலையா, பல கதாநாயகிகளுடன் நடித்துள்ளார்.
பாலையாவின் பாட்டியாகவும் காதலியாகவும் நடித்த ஒரே கதாநாயகி...யார் அவர் தெரியுமா?
Published on

சென்னை,

நந்தமூரி பாலகிருஷ்ணா(பாலையா), தற்போது தொடர்ச்சியாக ஹிட் படங்களில் நடித்து வருகிறார். அகண்டா படத்திலிருந்து சமீபத்தில் வெளியான அகண்டா 2 வரை, இவர் நடித்த படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றியை கண்டுள்ளன.

பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வரும் பாலையா, பல கதாநாயகிகளுடன் நடித்துள்ளார். அதிலும் சில கதாநாயகிகள் அவரின் மனைவி மற்றும் அம்மா ரோலில் தோன்றியுள்ளார்கள். ஆனால் அதிலும் வித்தியாசமாக, ஒரே நட்சத்திர நடிகை பாலையாவின் பாட்டியாகவும் நடித்துள்ளார். அவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?

அவர் வேறு யாருமல்ல, சிம்ரன்தான். ஒரு காலத்தில் நட்சத்திர கதாநாயகியாக சிறந்து விளங்கிவர்களில் சிம்ரனும் ஒருவர். சிம்ரன் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கில், மெகாஸ்டார் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா போன்ற நட்சத்திர ஹீரோக்களின் சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்.

Also Read
’கனவு நனவானது’ - ஜான் மேயர் கச்சேரியில் பூஜா ஹெக்டே உற்சாகம்
பாலையாவின் பாட்டியாகவும் காதலியாகவும் நடித்த ஒரே கதாநாயகி...யார் அவர் தெரியுமா?

இதில் பாலையாவும் சிம்ரனும் இணைந்து 5 படங்களில் நடித்துள்ளனர். சமரசிம்ம ரெட்டி, நரசிம்ம நாயுடு, சீமா சிம்மம், ஒக்கமகடு மற்றும் அரககிண்டி அல்லுடு. இதில் ‘ஒக்கமகடு’ படத்தில் சிம்ரன், பாலையாவின் மனைவி மற்றும் பாட்டி என்ற இரட்டை ரோலில் நடித்தார், இது ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக அமைந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com