"மகாராஜா" பட இயக்குநரை அழைத்து பாராட்டிய ஆஸ்கர் விருது வென்ற எழுத்தாளர்

நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'மகாராஜா' படம் உலகளவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
"மகாராஜா" பட இயக்குநரை அழைத்து பாராட்டிய ஆஸ்கர் விருது வென்ற எழுத்தாளர்
Published on

நியூயார்க்,

'குரங்கு பொம்மை' படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன், நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய திரைப்படம் 'மகாராஜா'.இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி வெளியானது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான வன்கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் மக்களின் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வசூல் ரூ201 கோடியை தாண்டியது. திரை வெற்றியைத் தொடர்ந்து ஓ.டி.டி.யிலும் மக்களின் வரவேற்பை பெற்றது. நெட்பிளிக்ஸ் தளத்தில் கடந்த ஆண்டு வெளியான இந்தியப் படங்களிலேயே அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் 'மகாராஜா' 2 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது.

மகாராஜா திரைப்படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து சீனாவில் கடந்த ஆண்டு நவம்பர் 29-ந் தேதி வெளியிட்டனர். இப்படம் சுமார் 40,000 திரைகளில் வெளியிட பட்டது. இப்படம் சீன ரசிகர்களின் வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டது. இந்த படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனுக்கு பெரிய அளவில் பாராட்டுகளும் கிடைத்தது.

இந்நிலையில், தற்போது அமெரிக்கா சென்றுள்ள இயக்குநர் நித்திலன், நியூயார்க்கில் 'பேர்ட்மேன்' பட திரைக்கதை எழுத்தாளர் அலெக்சாண்டர் டினோலாரிஸை சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பு தொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அவர், "என்றைக்கும் மனதில் வைத்து போற்றும் வகையிலான ஒரு சம்பவம் நியூயார்க்கில் நடந்தது. 'பேர்ட்மேன்' எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. ஆஸ்கர் விருது பெற்ற திரைக்கதை எழுத்தாளருடன் உணவருந்தி நேரத்தை செலவிடுவது என்பது சிறந்த அனுபவம். என்னை உங்கள் வீட்டிற்கு அழைத்து இவ்வளவு அன்பை காட்டியதற்கு நன்றி அலெக்சாண்டர் டினோலாரிஸ்" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

'மகாராஜா' படத்தைப் பார்த்த ஆஸ்கர் விருது வென்ற 'பேர்ட்மேன்' படத்தின் இயக்குநர் படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டியதாகவும், அவரது அடுத்த படத்தில் நடிக்க அனுராக் காஷ்யப்புக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் நிதிலன் சுவாமிநாதன் கடந்த ஜனவரி மாதம் தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com