பாக்ஸ் ஆபிஸில் புயலைக் கிளப்பிய 'தி பாரடைஸ்'.. முதலில் நாளிலேயே இத்தனை கோடி வசூலா?

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இந்த படத்தை இயக்கியுள்ளார்.

பாக்ஸ் ஆபிஸில் புயலைக் கிளப்பிய 'தி பாரடைஸ்'.. முதலில் நாளிலேயே இத்தனை கோடி வசூலா?
Published on: 

சென்னை,

இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இந்தபடம் முதல் நாளில் மட்டும் உலகளவில் ரூ.88 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘தி பாரடைஸ்’

நானி நடிப்பில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தசரா’. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி தனது 33-வது படமான ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், ‘தசரா’வைப் போலவே நானி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நயாகி கயாடு லோஹர்

அனிருத் இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 24-ம் தேதி (நேற்று) வெளியாகி உள்ளது. இதில் மோகன் பாபு, சோனாலி குல்கர்னி, கயாடு லோஹர், சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சிறப்புப் பாடலில் கீர்த்தி சுரேஷ்

‘தசரா’ படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ், ‘தி பாரடைஸ்’ படத்தில் சிறப்புப் பாடல் ஒன்றில் நடனமாடியுள்ளார். ‘யேஷானகுலா’ (Yeshanagula) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல் இணையத்தில் வைரலானது.

முதல் நாள் வசூல்

இந்தநிலையில், இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இந்தபடம் முதல் நாளில் மட்டும் உலகளவில் ரூ.88 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சன் கதைக்களத்தில் வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தொடர்ந்து வசூல் சாதனையை இந்த படம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com