'பென்ஸ்' படத்தில் ராகவா லாரன்ஸிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை

லோகேஷ் கனகராஜின் 'ஜி ஸ்குவாட்' நிறுவனம் பென்ஸ் படத்தை தயாரிக்க உள்ளது.
'பென்ஸ்' படத்தில் ராகவா லாரன்ஸிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 'பென்ஸ்' படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளர். லோகேஷ் கனகராஜின் 'ஜி ஸ்குவாட்' தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் 2-வது படமாக 'பென்ஸ்' படம் உருவாகிறது. 'ரெமோ, சுல்தான்' போன்ற வெற்றி படங்களை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இப்படத்தையும் இயக்குகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்தது. தற்போது இந்த படத்தின் ப்ரீ புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

இந்த நிலையில் 'டாக்டர், டான், கேப்டன் மில்லர், பிரதர்' போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை பிரியங்கா மோகன்,  பென்ஸ் படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த படம் தொடர்பான அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com