

சென்னை,
இதுவரை இந்தியாவில் ரூ.45.75 கோடியும், வெளிநாடுகளில் ரூ.35.75 கோடியும் வசூலித்துள்ளது. இதன் மூலம் உலகளவில் மொத்த வசூல் ரூ.81.50 கோடியாக உயர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'சீன்'. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது. மலையாளத்தில் 'ஆவேசம்', 'ரோமன்சம்' உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.
சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். இதில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
படம் வெளியான முதல் நாளன்று அதிகாலை 6 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. இதையொட்டி அதிகாலை முதலே திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு படத்திற்கான டிக்கெட் முன்பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
'கருப்பு', 'விஸ்வநாத் & சன்ஸ்' ஆகிய படங்களைத் தொடர்ந்து இந்த ஆண்டில் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள மூன்றாவது திரைப்படம் 'சீன்'. இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள விதம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த நிலையில், 'சீன்' திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இரண்டாவது நாளில் மட்டும் இந்தியாவில் ரூ.20.25 கோடி நிகர வசூல் செய்துள்ளது.
இதுவரை இந்தியாவில் ரூ.45.75 கோடியும், வெளிநாடுகளில் ரூ.35.75 கோடியும் வசூலித்துள்ளது. இதன் மூலம் உலகளவில் மொத்த வசூல் ரூ.81.50 கோடியாக உயர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளிப் பண்டிகையைத் தொடர்ந்து அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால், திரையரங்குகளில் படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் வரும் நாட்களில் 'சீன்' படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.