தொடர்ந்து டிரெண்டிங்கில் இருக்கும் 'புஷ்பா' - படக்குழு வெளியிட்ட போஸ்டர்

அல்லு அர்ஜூன் நடிக்கும் 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து டிரெண்டிங்கில் இருக்கும் 'புஷ்பா' - படக்குழு வெளியிட்ட போஸ்டர்
Published on

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் 'புஷ்பா'. இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் பிறந்தநாளை முன்னிட்டு 'புஷ்பா-தி ரூல்' படத்தின் சிறப்பு கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது.

இந்த நிலையில் இந்த வீடியோ தற்போது யூ டியூபில் 64 மில்லியன் பார்வையாளர்களையும் 2.48 மில்லியன் லைக்குகளையும் குவித்து டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com