'சூர்யா 44' படத்தின் டைட்டிலுக்கு வந்த சிக்கல்!


சூர்யா 44 படத்தின் டைட்டிலுக்கு வந்த சிக்கல்!
x

சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகும் 'சூர்யா 44' படத்திற்கான டைட்டிலுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை,

நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் . சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகி வருகிறது. சூர்யா இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டைட்டில் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என கூறப்பட்டது.

இந்த நிலையில் இப்படத்தின் டைட்டிலுக்கு சிக்கல் ஒன்று வந்துள்ளது. அதாவது, கார்த்திக் சுப்புராஜ், சூர்யா 44 படத்திற்கு "கல்ட்" என்ற தலைப்பை யோசித்துள்ளாராம். ஆனால் நடிகர் அதர்வா, தான் இயக்க இருக்கும் புதிய படத்திற்கு இந்த தலைப்பை தான் பதிவு செய்துள்ளாராம். இந்த விஷயத்தை அறிந்து சூர்யா 44 படக்குழு அதர்வாவை தொடர்பு கொண்டு பேசியுள்ளது.

அந்த டைட்டிலை அதர்வா தர மறுத்துவிட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் கார்த்திக் சுப்புராஜ் தற்போது வேறொரு டைட்டிலை தேடி வருகிறாராம். எனவே ரசிகர்கள் பலரும் இப்படத்திற்கு என்ன தலைப்பு வைக்க போகிறார் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

1 More update

Next Story