'கூலி' பட ரிலீஸ் தேதியை இறுதி செய்த தயாரிப்பு நிறுவனம்

லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் 'கூலி' படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
'கூலி' பட ரிலீஸ் தேதியை இறுதி செய்த தயாரிப்பு நிறுவனம்
Published on

சென்னை,

நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான 'கூலி' பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் சவுபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் சென்னையில் நடைபெற்று 70 சதவீதம் முடிவடைந்துள்ளது. மீதமிருக்கும் 30 சதவீத படப்பிடிப்பை மார்ச் மாதத்திற்குஙள முடிக்க பட குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். அதற்கான படப்பிடிப்பை ஐதராபாத், விசாகப்பட்டினம், சென்னை ஆகிய பகுதிகளில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

இத்திரைப்படம் கோடை விடுமுறை முன்னிட்டு மே மாதம் வெளியாகும் என தகவல்கள் பரவி வந்தநிலையில், தற்போது ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, தயாரிப்பு நிறுவனம் கூலி திரைப்படத்தை ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறது. கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வெளியான 'ஜெயிலர்' படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. ஜெயிலர் திரைப்படம் வெளியான அதே தேதியில் கூலி திரைப்படமும் வெளியாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை தந்துள்ளது. எனவே இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com