கதாநாயகனான வில்லன்

சாந்த குமார் டைரக்டு செய்யும் 3-வது படத்தில் நாயகனாக அர்ஜூன் தாஸ் நடிக்கிறார்.
கதாநாயகனான வில்லன்
Published on

மவுனகுரு, மகாமுனி ஆகிய படங்களை இயக்கி பிரபலமானவர், சாந்தகுமார். 'மவுனகுரு' விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. 'மகாமுனி' சர்வதேச திரைப்பட விழாக்களில் 30 விருதுகளை வென்றது. சாந்த குமார் தனது 3-வது படத்தை டைரக்டு செய்ய உள்ளார். இதில் கதையின் நாயகன் கதாபாத்திரத்தில் அர்ஜூன் தாஸ் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றனர். கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர், அர்ஜூன்தாஸ். ரேஷ்மா வெங்கடேஷ், சுஜித் சங்கர், ஜி.எம்.சுந்தர், எஸ்.ரம்யா ஆகியோரும் படத்தில் உள்ளனர். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. ஒளிப்பதிவு-சிவா, இசை-தமன்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com