சமந்தாவை கவர்ந்த கதாநாயகர்கள்

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா இந்தியில் பேமிலிமேன் 2 மூலம் வெப் தொடரில் நடிக்க வந்துள்ளார்.
சமந்தாவை கவர்ந்த கதாநாயகர்கள்
Published on

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா இந்தியில் பேமிலிமேன் 2 மூலம் வெப் தொடரில் நடிக்க வந்துள்ளார். சமந்தா அளித்துள்ள பேட்டியில், பேமிலிமேன் 2 தொடர் மூலம் வட இந்திய ரசிகர்களை சந்திக்க போகிறேன். இந்தியில் ரன்வீர் கபூர் ஜோடியாக நடிக்க ஆசை உள்ளது.

என்னுடன் நடித்த கதாநாயகர்களில் தனித்திறமை உள்ளவர் யார் என்று கேட்டால் விஜய் பெயரை சொல்வேன். அவர் படப்பிடிப்பு தளத்தில் எத்தனை மணி நேரம் ஆனாலும் சரி ஷாட் சொல்வது வரை சினிமாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லாதவர் மாதிரி இருப்பார். ஆனால் கிளாப் சொல்லி நடிக்க ஆரம்பித்தார் என்றால் மொத்தமாகவே புதிய மனிதராக கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். பல தடவை அவரை பார்த்து நான் அதிசயித்து போய் இருக்கிறேன்.

சூர்யா, மகேஷ்பாபு ஆகியோருடனும் சேர்ந்து நடித்து இருக்கிறேன். இருவரும் வளர்ந்த பெரிய நடிகர்கள். ஆனால் அவர்கள் நடிக்கும்போது அப்போதுதான் நடிக்க வந்த புதியவர்கள் மாதிரி நடிப்பார்கள். சிறுசிறு விஷயங்களை கவனித்து புதுசாக கற்றுக்கொண்டு இப்போதுதான் முதல் படத்தில் நடிக்கிறோம் என்ற உணர்வோடு நடிப்பது மாதிரியே நடிப்பார்கள். இந்த நடிகர்களிடம் எனக்கு பிடித்த விஷயங்கள் இவை'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com