4 நாட்களில் ரூ.200 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸை கலக்கும் ‘தி ராஜா சாப்’


4 நாட்களில் ரூ.200 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸை கலக்கும் ‘தி ராஜா சாப்’
x

பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ படம் பாக்ஸ் ஆபிஸில் பல கோடிகளைத் திரட்டி வருகிறது.

சென்னை,

பான் இந்தியா நட்சத்திரம் பிரபாஸ் நடிப்பில் கடந்த 9ந் தேதி வெளியான படம் ‘தி ராஜாசாப்’. பீப்பிள் மீடியா பேக்டரி தயாரிப்பில் மாருதி இயக்கிய இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாகவும், சஞ்சய் தத், போமன் இரானி, ஜரினா வஹாப் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர், ‘ராஜா சாப்’ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளில் 1சதவீதம் பூர்த்தி செய்யத் தவறினாலும் கேள்வி கேட்கலாம் என்று சவால் விட்டிருந்தார்.

பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் பாக்ஸ் ஆபிஸில் பல கோடிகளைத் திரட்டி வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் 4 நாட்களில் ரூ.201 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story