`பில்லா' திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியானது

நவீன 4கே தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு பில்லா திரைப்படம் வெளியாக உள்ளது.
`பில்லா' திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியானது
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்றான ‘பில்லா’, தற்போது மீண்டும் திரையரங்குகளுக்கு வர இருக்கிறது. கடந்த 2007-ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. அஜித்குமார் இரட்டை வேடத்தில் நடித்த இப்படத்தில் நமீதா, நயன்தாரா, பிரபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இது 1980-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த ‘பில்லா’ படத்தின் ரீமேக் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் மூலம் அஜித்தின் ஸ்டைலும், நடிப்பும் புதிய உயரத்தை எட்டியது.

இந்த நிலையில், அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற மே 1-ஆம் தேதி ‘பில்லா’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. நவீன 4கே தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்ட இந்த படம், தமிழ்நாடு முழுவதும் 150-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.

இதற்கிடையில், டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்ட ‘பில்லா’ படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com