விஜய்யின் “ஜனநாயகன்” படம் வெளியாகும் நாளே உண்மையான திருவிழா - சிலம்பரசன்

அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் ‘ஜன நாயகன்’ படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
விஜய்யின் “ஜனநாயகன்” படம் வெளியாகும் நாளே உண்மையான திருவிழா - சிலம்பரசன்
Published on

கேவிஎன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜன நாயகன் பொங்கலை முன்னிட்டு ஜன. 9ஆம் தேதி உலகெங்கும் வெளியாக இருந்தது.வெளிநாட்டில் மட்டுமே முன்பதிவில் சுமார் ரூ.60 கோடி வரைக்கும் டிக்கெட்டுகள் விற்பனையாகி இருந்த நிலையில், படத்திற்கான சான்றிதழ் அளிக்காததால் படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நாளை காலை தீர்ப்பு வெளியாக இருக்கும் நிலையில் இது குறித்து சினிமா பிரபலங்கள் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். இயக்குநர் அஜய் ஞானமுத்து, ஜெயம் ரவி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இயக்குநர் அமீர் ஆகியோர் ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்கள்.

இந்த நிலையில், நடிகர் சிலம்பரசன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், அன்புள்ள விஜய் அண்ணா, பின்னடைவுகள் எப்போதும் உங்களைத் தடுத்ததில்லை. இதைவிட பெரும் புயல்களைத் தாண்டி வந்துவிட்டீர்கள். இதுவும் கடந்து போகும். ஜனநாயகன் வெளியாகும் அன்றே உண்மையான திருவிழா ஆரம்பமாகும் எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com