‘யூத்' படத்திற்கு கிடைத்த வரவேற்பு.. முதல் நாள் வசூல் விவரம்

பள்ளி மாணவர்களின் கதையை மையப்படுத்தி வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
‘யூத்' படத்திற்கு கிடைத்த வரவேற்பு.. முதல் நாள் வசூல் விவரம்
Published on

சென்னை,

‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘நெடுஞ்சாலை’ படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கென் கருணாஸ். அதனை தொடர்ந்து ‘அசுரன்’, ‘விடுதலை 2’, ‘வாத்தி’ உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றுள்ளார்.

இவர் தற்போது ‘யூத்’ என்ற படத்தை இயக்கியும் நடித்தும் உள்ளார். பார்வதா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ‘சிறை’ படம் மூலம் பாராட்டுகளை பெற்ற அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ், சுராஜ் வெஞ்சரமூ ஆகியோர் இப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

பள்ளி மாணவர்களின் கதையை மையப்படுத்திய இந்த படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘யூத்’ திரைப்படம் முதல் நாளில் ரூ.3.2 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து வரும் விடுமுறை நாட்களை முன்னிட்டு இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com