கிஷோர் நடித்துள்ள "மெல்லிசை" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இப்படம் அப்பா- மகள் இடையேயான உறவைப் பிரதிபலிக்கும் கதை கொண்டது.
சென்னை,
2007-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர் நடிகர் கிஷோர். இத்திரைப்படத்தினை தொடர்ந்து ஜெயம் கொண்டான், வெண்ணிலா கபடிக்குழு, விடுதலை, வேட்டையன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் படித்து பிரபலமானர்.
இவர் தற்போது, இயக்குநர் தீரவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மெல்லிசை' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை 'வெப்பம் குளிர் மழை'யைத் தயாரித்த ஹேஷ்டேக் எப்டிஎப்எஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இதில் தனன்யா, சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், ஜஸ்வந்த் மணிகண்டன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் அப்பா- மகள் இடையேயான உறவைப் பிரதிபலிக்கும் கதை கொண்டது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள 2 பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனத்தை பெற்றன.
இந்த நிலையில், மெல்லிசை படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 30-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.






