‘பி​யாண்ட் தி கேரளா ஸ்டோரி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்த படத்தை காமாக்யா நாராயண் சிங் இயக்​கி வருகிறார்.
‘பி​யாண்ட் தி கேரளா ஸ்டோரி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் 'தி கேரளா ஸ்டோரி'. இந்த படத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த படம் பல்வேறு சர்ச்சைகளை தாண்டி வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்தநிலையில் அந்தப் படத்தின் அடுத்த பாகமாக பியாண்ட் தி கேரளா ஸ்டோரி என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை காமாக்யா நாராயண் சிங் இயக்கி வருகிறார். கேரளா ஸ்டோரி படத்தைத் தயாரித்த விபுல் அம்ருத்லால் ஷா தயாரிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 27ந் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com