'ஜவான்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு..!

ஷாருக்கான் நடித்துள்ள 'ஜவான்' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
'ஜவான்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு..!
Published on

சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடலான 'வந்த எடம்' என்ற பாடல் வெளியாகி கவனம் ஈர்த்தது.

இந்த நிலையில் 'ஜவான்' படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 'ஹையோடா' என்ற பாடல் நாளை (ஆகஸ்ட் 14) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com