'தக் லைப்' படத்தின் ரிலீஸ் டீசர் வெளியீடு

நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு 'தக் லைப்' படத்தின் வெளியீட்டுத் தேதிக்கான டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Published on

சென்னை,

36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் திரிஷா ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதனையடுத்து இப்படம் எப்போது திரைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர்.

இந்தநிலையில், கமல்ஹாசன் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் 'தக் லைப்' படத்தின் வெளியீட்டுத் தேதிக்கான டீசரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 5-ந் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com