"ஜனநாயகன் ரிலீஸ் - இருக்கும் ஒரே வழி..?" - மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி

ஜனநாயகன் படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை.
சென்னை,
’ஜனநாயகன்’, ’பராசக்தி’ படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், பராசக்தி படத்தில் 25 இடங்களில் வசனங்களை மியூட் செய்து, காட்சிகளை கட் செய்த பிறகே யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், ஜனநாயகன் படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இன்று இதற்கான வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில், வழக்கு 21-ம் தேதிக்கு தள்ளிப்போனது. பொங்கலுக்காவது படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கு தள்ளிப்போனதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி "ஜனநாயகன்’’ படத்திற்கு சீக்கிரம் ரிலீஸ் ஆக வேண்டும் என்றால் தயாரிப்பு நிறுவனம் நாளை காலையே கூட சுப்ரீம் கோர்ட்டில் முறையிடலாம் என தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,
"ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்க வேண்டும் என தனி நீதிபதி அளித்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு தடை விதித்துள்ளது .
இதனை எதிர்த்து நாளை காலையே கூட சுப்ரீம் கோர்ட்டில் படக்குழு முறையிடலாம். அவரச வழக்காக இதனை விசாரித்து தீர்ப்பளிக்க கோரலாம். ஆனால், இதில் அத்தியாவசிய அவரசம் உள்ளதா? என கோர்ட்டு பார்க்கும். எனவே, அதிலும் வெற்றி கிடைப்பது சந்தேகம் தான்" என்றார்.
Related Tags :
Next Story






