’ஆட்டி’ படத்தின் ரிலீஸ் டிரெய்லர் வெளியானது

தி.கிட்டு இயக்கிய ‘ஆட்டி’ படம் வருகிற ஜூன் 5-ல் திரைக்கு வர உள்ளது.
’ஆட்டி’ படத்தின் ரிலீஸ் டிரெய்லர் வெளியானது
Published on

சென்னை,

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘ஆட்டி’. ‘மேதகு; பாகம் 1’, ‘சல்லியர்கள்’ படங்களை இயக்கிய தி.கிட்டு இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணனே காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ‘அயலி’ புகழ் அபி நட்சத்திரா கதாநாயகியாக நடித்துள்ளார். காதல் சுகுமார், சௌந்தர், பிரவீன் பழனிச்சாமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

“எங்கள் குளத்தில் பெண்களே முதலானவர்கள்” என்ற கருத்தை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. பெண்களின் சமூக பங்கு மற்றும் அவர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் கதைக்களம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வர உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள காட்சிகள், கதையின் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளன. மேலும், டிரெய்லர் வெளியீட்டின் மூலம் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com