

நெப்போலியன் முதன்முதலாக, டெவில்ஸ் நைட் என்ற ஹாலிவுட் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். அந்தப் படம் வெற்றிகரமாக ஓடியதால், அவரை மேலும் ஒரு ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். அந்தப் படத்தின் பெயர், டிராப் சிட்டி.
இதில் நெப்போலியனுடன், இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷ் இணைந்து நடிக்கிறார். இவர் நடிக்கும் முதல் ஹாலிவுட் படம் இது. ப்ராண்டன் டி ஜாக்சன் என்ற ஹாலிவுட் நடிகரும் உடன் நடிக்கிறார். டெல் கணேசன் டைரக்டு செய்கிறார். இது, சாத்தான்குளம் சம்பவத்தை நினைவூட்டுவது போன்ற கதையம்சம் கொண்ட படம்.