புற்றுநோயில் சிக்கியும் புகைப்பிடிக்கும் காட்சி... சஞ்சய்தத்துக்கு எதிர்ப்பு

புற்றுநோயில் சிக்கியும் புகைப்பிடிக்கும் காட்சி... சஞ்சய்தத்துக்கு எதிர்ப்பு
Published on

இந்தி திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் சஞ்சய்தத் கேஜிஎப் படத்தில் குரூர வில்லனாக நடித்து மிரட்டினார். அந்த படத்துக்கு பிறகு அவருக்கு வில்லன் வாய்ப்புகள் குவிகின்றன.

தற்போது தமிழில் லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார். டபுள் ஐஸ்மார்ட் என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். இந்த நிலையில் சஞ்சய்தத்தின் 65-வது பிறந்த நாளையொட்டி லியோ மற்றும் ஐஸ்மார்ட் படக்குழுவினர் அவரது உருவப்பட போஸ்டர்களை வெளியிட்டு உள்ளனர்.

அந்த போஸ்டர்களில் சஞ்சய்தத் ஸ்டைலாக புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. இது சர்ச்சையாகி உள்ளது. பிறந்த நாளில் புகைப்பிடிக்கும் போஸ்டரை வெளியிடுவதா? என்று வலைதளத்தில் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

சஞ்சய்தத் ஏற்கனவே நுரையீரல் புற்றுநோயில் சிக்கி அதற்கு நீண்ட காலம் சிகிச்சை பெற்று மீண்டார். அப்படிப்பட்ட நீங்கள் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிக்க எப்படி சம்மதித்தீர்கள்? உங்கள் பிறந்த நாளில் புகைப்பிடிக்கும் போஸ்டரை வெளியிடலாமா? என்று பலரும் கண்டித்து வருகிறார்கள். இது பரபரப்பாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com