இரண்டாவது நிச்சயதார்த்தம்... எமி ஜாக்சனிடம் காதலை வெளிப்படுத்திய ஹாலிவுட் நடிகர்

கடந்த சில மாதங்களாக எமி ஜாக்சன், நடிகர் எட்வர்ட் பீட்டர் வெஸ்ட் விக் என்பவரை காதலித்து வருவதாக கூறப்பட்டது.
இரண்டாவது நிச்சயதார்த்தம்... எமி ஜாக்சனிடம் காதலை வெளிப்படுத்திய ஹாலிவுட் நடிகர்
Published on

சென்னை

மதராசபட்டனம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். தொடர்ந்து தாண்டவம், ஐ, கெத்து, தெறி, எந்திரன் 2.0 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான 'மிஷன் சாப்டர் 1 - அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தில் நடித்து இருந்தார்.

இங்கிலாந்தை சேர்ந்த எமி ஜாக்சன் தொழிலதிபர் ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்தார். இவர்களுக்கு கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நிச்சயமானது. ஆனால் திருமணம் ஆகாமலேயே இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்பு கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். அதனால் எமி ஜாக்சன் தனது மகன் ஆண்ட்ரியாசுடன் இங்கிலாந்தில் தனியாக வாழ்ந்து வந்தார்.

இதற்கிடையே கடந்த சில மாதங்களாக நடிகை எமி ஜாக்சன், பிரபல ஹாலிவுட் நடிகர் எட்வர்ட் பீட்டர் வெஸ்ட் விக் என்பவரை காதலித்து வருவதாக கூறப்பட்டது. இருவரும் இணைந்து ஜாலியாக வெளியே சுற்றும் புகைப்படங்களையும் எமி ஜாக்சன் அவ்வப்போது வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில் நடிகர் எட்வர்ட் பீட்டர் வெஸ்ட் விக், சுவிட்சர்லாந்தில் உள்ள பனி படர்ந்த ஆற்றுப்பாலம் ஒன்றில் வைத்து எமி ஜாக்சனிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். அதனை ஏற்றுக்கொண்ட எமி ஜாக்சன் தனது இரண்டாவது நிச்சயதார்த்தம் குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com