'களம்காவல்' படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

இந்தப் படம் இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை,
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் மம்முட்டி. சமீபத்தில் இவரது நடிப்பில் 'பசூக்கா' படம் வெளியானது. டீனா டென்னிஸ் இயக்கிய இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதனை தொடர்ந்து மம்முட்டி புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதில் மம்முட்டியுடன் ஜெயிலர் படல் வில்லன் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு 'களம்காவல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜிதின் கே ஜோஷ் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படம் இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலானநிலையில், தற்போது செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story






