ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'ரெபெல்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

'ரெபெல்' திரைப்படம் வருகிற மார்ச் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'ரெபெல்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது
Published on

சென்னை,

அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரெபெல்'. இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், மமிதா பைஜு, வெங்கிடேஷ் வி.பி, ஷாலு ரகிம், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், 'ரெபெல்' படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'தி ரைஸ் ஆப் ரெபல்' என்ற பாடல் வெளியாகி உள்ளது.

அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ள இந்த பாடலை அருண்ராஜா காமராஜ் மற்றும் ஆப்ரோ இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'ரெபெல்' திரைப்படம் வருகிற மார்ச் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com