'ஜே பேபி' படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

'ஜே பேபி' திரைப்படம் வருகிற மார்ச் 8-ந்தேதி வெளியாக உள்ளது.
'ஜே பேபி' படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது
Published on

சென்னை,

இயக்குனர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ள திரைப்படம் 'ஜே பேபி'. இந்த படத்தை இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஊர்வசி, 'அட்டகத்தி' தினேஷ், மாறன், கவிதா பாரதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு டோனி பிரிட்டோ இசையமைத்துள்ளார். 'ஜே பேபி' படத்துக்கு 'யு சான்றிதழ்' வழங்கப்பட்டுள்ளது. 'ஜே பேபி' திரைப்படம் வருகிற மார்ச் 8-ந்தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'லிட்டில் பிட் கிரேஸி' என்ற பாடல் வெளியாகி உள்ளது. ரோஷன் ஜேம்ராக் இந்த பாடலை எழுதி பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com